Skip to main content

கைது செய்த போலீஸ்... நெஞ்சு வலி என அட்மிட் ஆன ஊராட்சித் தலைவர்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

 panchayat president was admittedhospital after being arrested police

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது மீனம்பூர். இந்த ஊர் ஏரியில் அரசு அனுமதி பெறாமல் மணல் கொள்ளை நடப்பதாக அதே ஊரைச் சேர்ந்த அப்ரார் உசேன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து அதை விழுப்புரம் செஞ்சி பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனம்பூர் கிராம ஊராட்சித் தலைவர் முன்வர், அவரது மகன் லியாகத் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்ரார் உசேன் காரில் செல்லும்போது வழிமறித்துக் கடுமையாகத் தாக்கியதாகவும், அவரது கார் கண்ணாடியையும் உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இரு தரப்பினரும் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார்களின் மீது விசாரணை நடத்திய போலீசார் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து, ஊராட்சித் தலைவர் முன்வர் அவரது மகன் லியாகத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஊராட்சித் தலைவர் முன்வருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி செஞ்சி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மணல் கொள்ளை நடப்பதாக போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்