Skip to main content

பஞ்சலோக சிலைகள் கடத்தல்;அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
பஞ்சலோக சிலைகள் கடத்தல்;
அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் 6 பஞ்சலோக சிலைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பந்தலூரில் உள்ள ஸ்ரீபசுபதீஸ்வர் கோவில் உள்ளிட்ட இரண்டு கோவில்களில் இருந்து 6 பஞ்சலோக சிலைகள் கடத்தப்பட்டது. இந்த சிலைகள் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான சிலைகள் ஆகும். கடந்த 2013 ஆம் ஆண்டு கோவில் செயல் அலுவலராக பதவியேற்ற காமராஜ் , சிலைகள் மற்றும் சொத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, சிலைகள் காணாமல் போனது தொடர்பாக அவர் எந்த புகாரையும் அளிக்கவில்லை. 

மேலும் இதற்கு அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஞானசேகரன் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் காவலர்களிடம் புகார் அளித்திருந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய காவலர்கள் , அறநிலையத்துறை அதிகாரிகள் கஜேந்திரன், ஞானசேகரன், காமராஜ் உட்பட 7 அதிகாரிகள் மற்றும் 4 இடைத்தரகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்