ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் சிறை தண்டனை!
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறை தண்டனை வழங்கலாம் என்றும், அதேநேரத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்து வாகனம் ஓட்டுபவர்களை தவறாக கருத முடியாது என்றும் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும், மறந்து வருபவர்களுக்கும் வேறுபாடு உள்ளது. வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எப்படி முக்கியமோ, அதே போல் அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.