Skip to main content

பிபிஷா மரணத்தில் ராஜேஷை கைது செய்யக்கோரி கலெக்டரிடம் வலியுறுத்தல்

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
bi

 

பாலியியல் தொந்தரவில் பட்டதாாி பெண் பிபிஷா மரணம் அடைந்ததால் அண்ணனை கைது செய்ய வலியுறுத்தி உறவினா் மற்றும் மாதா் சங்கத்தினா் கலெக்டாிடம் மனு கொடுத்தனர்.

            குமாி மாவட்டம் கிள்ளியூா் அருகே வாழபழஞ்சி விளையை சோ்ந்தவா் ரசல்ராஜ். இவரது மகள் பிபிஷா (22) எம்.ஏ பட்டதாாியான இவர் வீட்டில்  தனியாக டி.வி. பாா்த்து கொண்டிருக்கும் போது திடீரென்று டி.வி யில் படம் தொியாமல் நின்றதாம். 


           உடனே பிபிஷா பக்கத்தில் இருக்கும் அண்ணன் உறவு முறை கொண்ட டி.வி. மெக்கானிக்கல் ராஜேஷ்(32) -ஐ டி.வி.யை சாி செய்ய சொல்லியிருக்காா். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ராஜேஷ் அந்த வீட்டிற்கு சென்று டி.வி யை சாி செய்து கொண்டிருக்கும் போது அதை அருகில் நின்று பாா்த்து கொண்டிருந்த பிபிஷா மீது ராஜேஷ்க்கு  சல்லாபம் ஏற்பட்டதால் அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.


              இதனால் அதிா்ச்சியடைந்த பிபிசா சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்துள்ளாா். இதனையடுத்து ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா். 
          இந்த நிலையில் மனமுடைந்த பிபிஷா உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். இது சம்மந்தமாக புதுக்கடை போலிசாா் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனா். 


          இந்த நிலையில் பிபிஷாவின் பெற்றோா்களும் மாதா் சங்கத்தினரும் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து போலிசாா் ராஜேஷ்க்கு உடந்தையாக செயல்பட்டு அவரை கைது செய்வதில் மெத்தனம் காட்டிவருவதாக குற்றம்சாட்டியதோடு உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.
                               

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக இசையில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா? - விளக்குகிறார் ஹோத்ரா

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Are there so many things in Carnatic music?- Explains Hotra!



'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவரும், பரத நாட்டிய கலைஞருமான ஹோத்ரா சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கர்நாடக இசையில் ஐந்து ஸ்தாயி இருக்கிறது. அதில் மத்திய ஸ்தாயி, தார ஸ்தாயி, மந்திர ஸ்தாயி, அதித்தார ஸ்தாயி, அனுமந்திர ஸ்தாயி ஆகியவை அடங்கும். இவையெல்லாம் வீணை மற்றும் மற்ற வாத்தியங்களில் வாசிக்க முடியுமே தவிர, நிரூபணம் செய்ய முடியாது. நவராக மாளிகை வர்ணத்தில் மட்டும் தான் அனுமந்திர ஸ்தாயி, அதித்தார ஸ்தாயி  உள்ளது. 

 

நாங்கள் படிக்கும்போது ஒரு வருடத்திற்கு 60 ராகங்கள் படிக்க வேண்டும்; 60 ராக லட்சணங்களைக் குறித்து படிக்க வேண்டும்; 60 கீர்த்தனைகள் குறித்து கட்டாயம் படிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு தியாகராஜர், சங்கீத மும்மூர்த்திகள், தேவாரம் நால்வர் உள்ளிட்ட 60 இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறை நாங்கள் படிக்க வேண்டும். அவ்வளவு விசயங்களை சங்கீதத்தில் கற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவ, மாணவிகள் தனியார் இசைப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ஐந்து ராகம் மட்டுமே கொடுக்கிறார்கள்.

 

அதுவும், எந்தெந்த ராகங்கள் என்பது குறித்து நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளது. இந்த அளவுக்கு ஏன் பாடக் குறைப்பு ஏற்பட்டது?, நாங்களே குறைவாக தான் படித்தோம் என்று வேதனைப்படுகிறோம். லட்சக்கணக்கான ராகங்கள் வெளியே வந்திருக்கிறது. அவ்வளவு ராகங்கள் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. மற்றொன்று பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களது சிஷ்யர்களுக்கு கற்றுக் கொடுப்பதேயில்லை. தங்களுக்கு தெரிந்த நுணுக்கங்களை சிஷ்யர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை? அதனால்தான் கர்நாடக இசை அழிந்து வருகின்றது என்று சொல்கிறேன். 

 

கலை கலையாக மதிக்கப்படாமல் தொழிலாக மாற்றப்படுகிறது. அந்த காலத்தில் கர்நாடக இசை என்றால் பயந்து கொள்வார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கர்நாடக இசையை அனைவரும் படிக்கிறார்கள். எனினும், இந்த காலக்கட்டத்தில் ஒரு ராகம் பாடினால் பாஸ் என்கிறார்கள். அதனால் தான் கர்நாடக இசையின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. தேய்ந்து கொண்டே வருகிறது. இசை வித்வான்கள் எல்லாம் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் கலைஞர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்?

 

எத்தனை பி.ஏ.மியூசிக் முடித்தவர்களும் எம்.ஏ. மியூசிக் முடித்தவர்களும் கல்லூரிகளுக்குச் சென்று இசைப் படிப்பு படிப்பவர்களும் கச்சேரி நடத்துகிறார்கள். கச்சேரி நடத்த தைரியம் இருக்கா? இன்றைக்கு தேவாரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை." இவ்வாறு ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
 

 

Next Story

"வாழை இலையில் சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?"- மருத்துவர் சி.கே.நந்தகோபாலன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

"Are there so many benefits of eating bananas?" - Dr. CK Nanthagopalan shared interesting information!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே.நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அதில், உணவு சாப்பிடுவது, வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பேசினார்.  

 

அப்போது அவர் கூறியதாவது, "வாழை இலையில் போரான் இருக்கிறது. நமது உடலுக்குத் தேவையான செலினியம், காப்பர், அயர்ன் போன்றவை வாழை இலையில் இருக்கிறது. ஒரு வாழை இலையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் நூறு வீடியோவை எடுக்க வேண்டும். அதில் அவ்வளவு அறிவியல் உள்ளது. நாம் எல்லாத்தையும் வேணாம் என்று எட்டி உதைத்துவிட்டோம். நமது பாரம்பரியத்தை இழந்துவிட்டோம். நீ பிறந்து வளர்ந்த உன் நிலப்பகுதியையும், உன் சமுதாயத்தையும், மதிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

நம்முடைய விஞ்ஞானத்தில் ஒரு துளி எடுத்தால், இந்த உலகத்தை ஆள முடியும். அகில உலகமும் உன்னிடம் மண்டியிட்டு இருக்கும். 'எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில்' என்று கவிதையை, பாட்டை மிக அழகாக எழுதுகிறீர்கள். ஆனால் எந்த வளத்தையும் நீங்கள் பார்க்கவில்லை. நமது உடல் ஆரோக்கியம் அனைத்தும் சமையல் கலையில்தான் இருக்கிறது. ஒரு உணவுப் பொருட்களை எப்படி பதப்படுத்தி வைக்க வேண்டும், எந்த காலத்தில் எந்த உணவைச் சமைக்க வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பன போன்றவை சமையல் கலையில்தான் இருக்கிறது. 

 

சரியான நேரத்தில் உணவை எடுக்க வேண்டும். காலை உணவு 08.30 மணிக்கு எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், அப்படியே சாப்பிட வேண்டும், மதிய உணவு 01.00 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால் அப்படியே அதை தொடர வேண்டும். இரவில் 07.00 மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மூன்று மணி நேரம் இடைவெளி கொடுக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். பால், அரிசி, மாவு போன்றவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம். சமைத்த உணவை அதில் வைக்க வேண்டாம். 

 

சமையல் கலை என்பது மிகப்பெரிய கலை. இரவு 12.00 மணி முதல் 02.00 மணி வரை சாப்பிடவே கூடாது. அதுபோல், மதியம் 12.00 மணி முதல் 02.00 மணி வரை சாப்பிடக்கூடாது. எல்லாமே சமையல் கலை. உங்கள் நேரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமையல் கலை என்பது உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. உணவை எப்பொழுது சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், ஏன் சாப்பிடக் கூடாது உள்ளிட்டவை அடங்கியது. இது படிக்க வேண்டும் என்றால் போய் கொண்டே இருக்கும். 

 

ஒரு குறிப்பிட்ட வகை மாங்காவை மட்டும் தேர்ந்தெடுத்து, அதை சிறிது சிறிதாக நறுக்குவார்கள். பின்னர், ஐந்து லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ அல்லது மூன்று கிலோ ராக் சால்ட்டைப் போட்டு, நறுக்கி வைக்கப்பட்ட மாங்காவைக் கொட்டிவிடுவார்கள். மூன்று நாட்களுக்கு ஊறல் போடுவார்கள். நான்காவது நாள் பனை ஓலையில் மாங்காவை கொட்டி காய வைப்பார்கள். ஓரளவுக்கு மாங்காய் பதமானதுடன், அதை எடுத்து பானையில் போட்டு மூடி விடுவார்கள். மூன்று வருடங்கள் ஆனாலும், அது ஒன்றும் ஆகாது. அந்த ஊறுகாய் கெட்டுப் போகவே போகாது. ஊறலில் நிறைய வகை இருக்கிறது. அதில், பொறித்தல், பொரியல், வறுத்தல், வருவல், கடையல், மசியல், வடகம், ஊறல், ஆவீடல், அவித்தல் ஆகியவை அடங்கும். ஆரோக்கியம் தான் முக்கியம்" எனக் கூறியுள்ளார்.