பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்ற தமிழ்நாடு நிதியமைச்சரின் அறிவிப்பு வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைத்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையைப் பெரிய அளவில் குறைத்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளது வேதனை தருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "பெட்ரோல், டீசல் மீதான வரியை இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் குறைத்துள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் வரிவிதிப்பு குறைக்கப்படும் நிலையில், எந்த அடிப்படையில் தமிழகத்தில் சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் விளக்க வேண்டும். மக்களை ஏய்த்துவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். மக்கள் வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது என்று நன்கறிவர்" என்று தெரிவித்துள்ளார்.