கர்நாடக மாநில துணை முதல்வரும், அமைச்சருமான சிவக்குமார் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னை வந்தார். அவரது வருகையை அறிந்த தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர், விமானநிலைத்தில் கருப்பு மற்றும் நீலக்கொடிகளை ஏந்தி நின்றனர். துணை முதல்வர் சிவக்குமாரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர்களின் நடவடிக்கைகள் இருந்தன.
இவர்களது வருகை குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஏ.கே.47 துப்பாக்கி சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துணை முதல்வர் சிவகுமாரை பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்து, காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மத்திய, மாநில காவல் துறையினர் சாதாரண உடையில் இதனை கண்காணித்தபடி இருந்தனர்.
விமானநிலைய காவல் ஆய்வாளர் பாண்டி, இரண்டு போலீஸ் வாகனங்களுடன் சிவகுமாரின் காரின் முன்னால் பாதுகாப்பாகச் சென்று விமான நிலைய எல்லை வரை அழைத்துச் சென்றார். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் சிவகுமாரின் கார் போலீஸ் பாதுகாப்புடன் விரைந்தது சென்றது.