Skip to main content

பிரதமர் மோடியுடன் இன்று ஓ.பி.எஸ் சந்திப்பு..!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
பிரதமர் மோடியுடன் இன்று ஓ.பி.எஸ் சந்திப்பு..!

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காததால், அங்கிருந்து மகாராஷ்டிரா சென்றார். அங்கு நேற்று காலை ஷீரடி சாய்பாபா கோயில், சனீஸ்வரன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் இன்று ஓபிஎஸ்சை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று காலை 11 மணிக்கு ஓபிஎஸ்., பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, அணிகள் இணைப்பு, தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இருவரின் சந்திப்புக்கு பின், அ.தி.மு.க., இரு அணிகளின் இணைப்பில், இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

சார்ந்த செய்திகள்