Published on 19/01/2020 | Edited on 20/01/2020
அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
![veeramani condemn to rajinikanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/twstT9p4EOSP-gSG4rGvvZWa2WPp1pW5aMP6knXWPiI/1579450907/sites/default/files/inline-images/dgfgfgfgf.jpg)
இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட கழக நிகழ்ச்சி பற்றி உண்மைக்கு மாறாக பேசியுள்ளார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருகிறேன் என்பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ரஜினி உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தி விட்டார்.
சோவை புகழ்கிறேன் என துக்ளக்கில் எழுதாத ஒன்றையும், அச்சிடாத ஒன்று குறித்தும் ரஜினி பேசியுள்ளார். ரஜினியை இவ்வாறு பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து அவருக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது எனஅந்த அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.