Skip to main content

என்எல்சி சுரங்க கழிவு பழைய பொருட்களில் இருந்து வளங்கள் பூங்கா திறப்பு

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Opening of Resource Park from NLC Mining Waste Old Materials

 

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கழிவுகளில் இருந்து வளங்கள் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக என்எல்சி சுரங்கத்திலிருந்து பெறப்பட்ட பழைய பொருட்களைக் கொண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  குப்பை பகுதியை மாற்றி பசுமையான பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது.  ராட்டை தோட்டம் என பொருள்படும்  பூங்கா 36  ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டது.

 

இதில் ரோபோக்கள், டைனோசர்கள், மற்றும் பிற விலங்குகள் மாதிரிகள் ராட்டை மற்றும் காந்தியடிகளின் மாதிரிகள் மற்றும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல மாதிரிகள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த பூங்காவை என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்ன குமார் மொட்டு பள்ளி திறந்து வைத்தார். நிறுவன திட்டம் மற்றும் செயலாக்க துறை இயக்குநர் மோகன் ரெட்டி சுரங்கத்துறை மற்றும் நிதித்துறை கூடுதல் பொறுப்பு இயக்குநர் சுரேஷ்சந்திரசுமன் தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பக் கண்ணு கோவிந்தராஜன் உள்ளிட்ட என்எல்சி உயர் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்