Skip to main content

சத்துணவில் பல்லி; மாணவிகள் வாந்தி மயக்கம்

Published on 02/02/2025 | Edited on 02/02/2025

 

 Lizard In food; Students are vomiting and fainting

தர்மபுரியில் அரசுப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்த நிலையில் அதை சாப்பிட்ட மாணவிகள் மயக்கம் வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது உணவில் பல்லி விழுந்தது. தெரியாமல் பல்லி விழுந்த சத்துணவுவை சாப்பிட்ட மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். வருவாய்க் கோட்டாட்சியர் சத்துணவு கூடத்தில் இருந்த உணவை ஆய்வு செய்தார். அதில் பல்லியின் தலை இருந்தது. இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்  இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்