திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையை அடுத்த துர்க்கை நம்மியந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே ஒரு விவசாயி தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச ஜனவரி 29 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சென்றபோது குறுக்கே ஒரு நாய் ஓடியது. அது வாயில் ஏதோ கவ்விக் கொண்டு ஓடியதை பார்த்து கல்லை கொண்டு தாக்கியுள்ளார். அது வாயில் கவ்வி இருந்ததை கீழே போட்டுவிட்டு ஓடியுள்ளது.
அது என்னவென அதன் அருகில் விவசாயி போய் பார்த்தபொழுது பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடி அறுபடாத ஒரு ஆண் குழந்தையின் தலையில்லாத உடல் பாகம் மட்டும் கடந்துள்ளது. குழந்தையின் தலையை மட்டும் காணவில்லை. அதை அந்த நாய் தின்றிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
யாரோ ஒரு கல் நெஞ்சம் கொண்ட தாய் ஆண் குழந்தையை ஒரு துணியில் சுற்றி அந்த ஊருக்கும் காலணிக்கும் இடையிலுள்ள சுடுகாட்டில் வீசிவிட்டு சென்றுயிருக்கலாம் என கூறப்படுகிறது.
தலையில்லாத குழந்தையின் தகவல் பரவ அக்கம் பக்க ஊர்க்காரர்கள் அங்கு திரண்டு வருகின்றனர். அந்த உடலைப் பார்த்து அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். அந்த தாயை சபித்தனர்.
பின்னர் இது பற்றிய தகவல் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் போலீசார் விசாரணைக்காக அக்கிராமத்திற்கு சென்றுள்ளனர்.