Skip to main content

கதிராமங்கலம் கிராம சபா கூட்டத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக தீர்மானம்!

Published on 15/08/2017 | Edited on 15/08/2017
கதிராமங்கலம் கிராம சபா கூட்டத்தில் 
ஓஎன்ஜிசிக்கு எதிராக தீர்மானம்!



சுதந்திர தின நாளிலும் கதிராமங்கலம் மக்கள் ஒஎன்ஜிசிக்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கிராமங்கலத்தில் ஒஎன்ஜிசிக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் மக்களுக்காக போராடியவர்கள் மீது போடபட்ட வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். ஒஎன்ஜிசி கதிராமங்கலத்தில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்கிற கோரிக்கையோடு இன்று வரை போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் 71வது சுதந்திர தின விழாவை நாடே கொண்டாடி வரும் நிலையில் கதிராமங்கலம் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குவிந்தனர். ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் எங்களை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கும் கிராம சபா கூட்டத்திலாவது அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இறுதி நேரம் வரை ஆட்சியர் அண்ணாதுரை வரவில்லை, அவருக்கு பதிலாக அரசாங்க தரப்பில் திருப்பனந்தாள் துனை ஆனையர் ரமேஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் பாபுவும் பஞ்சாயத்து எழுத்தர் விஜயக்குமார் ஆகியோர் கூட்டத்தை நடத்தினார்.

ஏற்கனவே போராட்டகளத்தில் பேசப்பட்ட சில கோரிக்கைக்களை தீர்மானமாக எழுதி கொண்டு வந்திருந்தனர். அதில் ஒன்றாவது தீர்மானமாக ஒஎன்ஜிசி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணை எடுப்பதால் கதிராமங்கலத்தின் ஒட்டுமொத்த நீர்வளமும், நிலவளமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட நிறுவனம் உடனடியாக ஆழ்துளை கிணறுகளை அகற்றி கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும்.

இரண்டாவது கோரிக்கையாக கதிராமங்கலம் கிராம எல்லைக்கு  உட்பட்ட பகுதிகளில் இனி வரும் காலங்களில் விவசாய தேவைகளுக்காகவும் குடிநீர் தேவைகளுக்காகவும்  மழைநீர்  செரிவூட்டவும் மட்டுமே ஆழ்துளாய் கிணறு அமைக்க வேண்டும் வேறு எதற்கும் குழாய்பதிக்க அனுமதிக்க கூடாது.
 
மூன்றாவது தீர்மானமாக  பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளோடு தீர்டானம் முன்வைத்தனர். ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த அதிகாரிகளை மக்கள் சூழ்ந்தனர். பிறகு மேலதிகாரிகளிடம் பேசி முடிவு சொல்வதாக நழுவினர், மக்களோ எந்த அதிகாரிகளிடம் பேசினாலும் இங்கயே பேசுங்க என முழக்கமிட்டனர் வேறு வழியின்றி ஐந்து தீர்மாணங்களையும் ஏற்றுக்கொண்டனர். 

அதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் ஒ,என்,ஜி,சி எங்களுக்கு 25 கோடி கொடுத்திருப்பதாக பேட்டி அளித்துள்ளனர். அதற்கான வரவு செலவு இப்பவே காட்டனும் என முழங்கினர் அதிகாரிகள் திருதிருவென முழித்தனர். பிறகு போராட்டம் திசை மாறிவிடும் என தீர்மாணம் நீறைவேற்றப்பதோடு முடித்துக்கொண்டனர். மேலும் யாரும் சுதந்திர கொடி குத்திக்கொள்ளக்கூடாது என தீர்மானித்திருந்தனர். அது போலவே யாரும் சுதந்திர கொடியை குத்திக்கொள்ளவில்லை. ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்