ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்!
கீரமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு தலைமை புலவர் நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டடிருந்ததால் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தது. மெரினா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்திருந்தது.
அதே போல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே இளைஞர்கள், பொதுமக்கள் பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயத்தின் முன்னால் உள்ள தலைமை புலவர் நக்கீரன் சிலையிடம் நீதி கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் செய்தனர்.
அதன் பிறகு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்த போது போராட்டத்தை முடித்துக் கொண்டு நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்து பேருந்து நிலையத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நினைவாக மரக்கன்று நட்டனர்.
தற்போது போராட்டம் வெற்றியின் ஓராண்டு நிறைவு தினத்தை கொண்டாடும் விதமாக கீரமங்கலம் ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர் மெய்நின்றநாதர் ஆலயத்தின் முன்னால் உள்ள தலைமை புவலர் நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று கடந்த ஆண்டு நடப்பட்ட மரக்கன்றுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- இரா.பகத்சிங்