Skip to main content

ஒரே நாளில் 600 வழக்கு... அசராத இளைஞர்கள்!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்பத்தில் தீவிரமாகக் கடைப்பிடித்த மக்கள், கடந்த இரண்டு நாட்களாக அதனைக் கடைப்பிடிக்கவில்லை. குறிப்பாக இளைஞர்கள், கடைப்பிடிக்காமல் உள்ளனர்.
 

one day 600 case filled rules and regulation not followed


இந்நிலையில் காரணமே இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றுபவர்களை மடக்கி பிடித்தது காவல்துறை. அதன்படி மார்ச் 29ந்தேதி மட்டும் 624 வழக்குகள் பதிவு செய்தது காவல்துறை. இதில் 4 கார்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 592 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், மார்ச் 30ந்தேதியும் இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றியபடி இருந்தனர். இதற்காக முக்கியச் சாலைகளைத் தவிர்த்து குறுக்குச் சாலைகளை அதிகம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர் என்கின்றனர் காவல்துறையினர்.


திருவண்ணாமலை, ஆரணியில் தான் அதிகளவில் இளைஞர்கள் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அதனால் அதனைத் தடுக்க அடுத்த கட்டமாக, வாகனம் ஓட்டுபவர்களின் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அவர்களின் லைசென்ஸ் ரத்து மற்றும் கைதாகும் நபர்களை அரசு விடுதிகளில் தனிமைப்படுத்தி வைக்கலாமா எனக் காவல்துறை வட்டாரத்தில் ஆலோசிக்கப்படுகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இளைஞர்களே உஷார்...காவல் துறையை ஏமாற்றுவதாக நினைத்து கரோனவிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்...!

 

சார்ந்த செய்திகள்