தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஓமிக்ரான்' எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 75- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், 'ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒமிக்ரான் அறிகுறியோடு வந்த நைஜீரியைவை சேர்ந்த சிலரின் மாதிரிகள் பெங்களூருக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஒமிக்ரான் பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவ வாய்ப்புள்ளதாகவும், ஒமிக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாக இருந்தாலும், தொற்றின் விகிதம் டெல்டா வகை வைரஸை விட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.