Skip to main content

திருட்டில் புது டெக்னிக் காட்டிய முதியவர்... போர்வை திருடனை பார்த்து வாயடைத்து போன காவல்துறையினர்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

ுி

 

உலகம் முழுவதும் அனைத்து இடங்களில் தினமும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நகைக் கடையில் துளையிட்டு கொள்ளையடிப்பதில் தொடங்கி வழிப்பறி வரை பல முறைகளில் திருடர்கள் இந்த கொள்கைகளைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள். காவல்துறையினரும் பல்வேறு வழிமுறைகளை வகுத்து இவர்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும் ஏதோ ஒரு வகையில் காவல்துறையினரை ஏமாற்றி மீண்டும் மீண்டும் இத்தகைய திருட்டு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். சிலர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டம் வரை தண்டிக்கப்பட்டாலும் அதைப் பார்த்து மற்ற திருடர்கள் திருந்துவது இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.

 

இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்றிருக்கும் ஒரு திருட்டு சம்பவம் பரம்பரை திருடனையே ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நடந்து முடிந்துள்ளது. நேற்று காலை திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் மது போதையில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு வந்து அவரின் அருகில் அமர்ந்துள்ளார். கையில் கொண்டுவந்துள்ள பையைப் பார்த்தபடியே சில வினாடிகள் இருந்த அவர், படாரென போதை இளைஞருக்கு அருகிலேயே காலை நீட்டித் தூங்குவது போல் பாவலா செய்துள்ளார். அங்குமிங்கும் பார்த்த அவர் பையில் கொண்டுவந்திருந்த போர்வையை எடுத்து தனது உடலில் போட்டுக்கொண்டு தூங்குவதைப் போல நடித்து போதை இளைஞரிடம் இருந்த செல்போனை சில வினாடிகளில் தன்வசப்படுத்தினார். இது அனைத்தும் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளில் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்த நூதன திருட்டில் ஈடுபட்டவரை காவல்துறையின் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்