Skip to main content

திருச்சியில் முறையான அனுமதி இல்லாமல் நடந்த பள்ளிக்கு சீல்!

Published on 22/06/2019 | Edited on 22/06/2019


கல்வி நிலையங்கள் வணிக மயமாகி மாறி வருகிறது என்பது பொதுவான குற்றசாட்டாக இருந்தாலும் போதிய அனுமதியோ வசதியோ இல்லாமல் முறைகேடாக பள்ளிக்கூடங்கள் நடத்துவதற்கு கல்வி அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் காரணமாக இருப்பதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதை திருச்சியில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவமே உதாரணம்! .

 Officers sealed the school without proper permission


திருச்சி மேலகல்கண்டார் கோட்டை சோமசுந்தரம் நகரில் பிளாசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தனர். பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு முதல் 125 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் உரிய அனுமதியின்றி பள்ளி செயல்பட்டு வருவதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து கடந்த 1 வருடமாக  வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பள்ளி துவங்குவதற்கு அரசின் உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரிந்தது. உடனே மேலும் பள்ளி சார்பில் அனுமதிக்க வேண்டும் கோரிக்கைகள் கொடுத்திருக்கிறார்கள்.

 Officers sealed the school without proper permission


அரசு விதிகளுக்கு உட்படாமல் இருந்த காரணத்தினால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க இயலாது எனவும், பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகத்தினருக்கு மாவட்ட கல்வி அலுவலர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாததால் அதனை கல்வித்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை மேலும் பள்ளியை சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை மூடி சீல் வைக்க அதிகாரிகள் ஊழியர்கள் ஆனால் பள்ளி நிர்வாகம் தரப்பில் தடுத்து நிறுத்தி அங்கீகாரம் பெற கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் பள்ளி நிர்வாகம் கேட்க கால அவகாசம் முடிந்ததால் திருச்சி கல்வி மாவட்ட அதிகாரி சின்னராஜ் மற்றும் கல்வி அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் அதிகாலையில் பிளாசம் மழலையர் பள்ளிக்குச் சென்று வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பள்ளியில் நுழைவாயிலைப் பூட்டி சீல் வைத்தனர். அப்போது மாணவர்களை பள்ளியில் விடுவதற்காக அவர்கள் பெற்றோர்கள் வந்தனர் பள்ளியில் சீல் வைக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் அவர்கள் பதட்டம் அடைந்தனர். தங்களது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 

 

இதற்கிடையில் தகவல் அறிந்ததும் அனைத்து மாணவர்களின் பெற்றோரும் பள்ளியின் முன்பு திரண்டனர். இதனால் பள்ளியில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து பள்ளியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
 

பள்ளிக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றக்கோரி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் திரண்டு வந்தனர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தியை மாணவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

 Officers sealed the school without proper permission!


அந்த மனுவில் எங்கள் பகுதியில் வேறு எந்த பள்ளியிலும் இல்லாத வசதி இந்த பள்ளியில் இருப்பதாகவும், தாங்கள் விருப்பப்பட்டுதான் தங்களது குழந்தைகளை சேர்த்ததாகவும் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர்கள் விதிகளின் படி பள்ளி இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றார். இதற்கு இடையில் அங்கீகாரம் பெறாத மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வி குறித்து ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் 70 பள்ளிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த பிளாசம் பள்ளியை சீல் வைத்த சம்பவம் திருச்சியில் மழலையர் பள்ளியில் நிர்வாகத்துக்கும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பள்ளி குறித்து தொடர்ச்சியாக புகார் செய்த மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டபாணியிடம் பேசிய போது..

இந்த பிளாசம் பள்ளிக்கூடத்திற்கு தொடக்க உரிமையே இல்லாமல் பள்ளி ஆரம்பித்துள்ளார்கள். வாடகை 30 வருடத்திற்கு வாங்க வேண்டியதை 15 வருடத்திற்கு மட்டும் வாங்கி கொடுத்துவிட்டு பிறகு 30 வருடங்கள் என்று திருத்தியிருக்கிறார்கள். பள்ளி கட்டிடத்திற்கு அனுமதி வாங்கவில்லை. ஆனால் எந்த அனுமதியில்லாமல் இருக்கிற பள்ளிக்கு அனுமதி கொடுக்கலாம் என்று வட்டார கல்வி அலுலவலர்  லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுக்க முயற்சி செய்த போது தான் புகார் கொடுத்தேன். அதன் பிறகு அந்த அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு என்னிடமே பேசினார்கள். முறையான அனுமதி வாங்கி பள்ளி நடத்துங்கள். எந்த அனுமதி இல்லாமல் பள்ளி நடத்துவதால் பாதிக்கப்பட போவது பொதுமக்கள் தான் என்று விடாபிடியாக  தொடர்ச்சியாக புகார்  கொடுத்து நிற்கவும் தான் வேறு வழியில்லாம் பள்ளிக்கு சீல் வைத்தார்கள். 

தற்போது திருச்சியில் அனுமதியில்லாமல் நடத்தப்படும் 70 பள்ளிகள் பெயர் பட்டியல் வெளியிட்டிருக்கிறார். ஆனால் சீல் வைத்தது இந்த ஒரு பள்ளி மட்டுமே மற்ற பள்ளிகள் அனைத்தையும் அனுமதி கொடுப்பதற்கு பேரமாகவும், வாங்கி கொண்டு தான் தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.  என்றார்.

நாம் இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி அவர்களிடம் பேசினோம்.... அவர், பிளாசம் பள்ளிக்கு கட்டிட அனுமதி மற்றும் வாடகை ஒப்பந்தம் இல்லை. இதனால் தான் சீல் வைக்கப்பட்டது. இதற்கு கலெக்டர் வெளிட்ட அனுமதியில்லாத பள்ளிகளுக்கு திறக்க கூடாது என்று நோட்டிஸ் அனுப்பியாச்சு இதற்கு இடையில் பிளாசம் பள்ளி போன்று திறந்து இருப்பதாக தெரிந்தலோ அல்லது தகவல் சொன்னாலே உடனே சீல் வைத்து விடுவோம் என்றார். அதிரடியாக.

எதிர்காலத்தை போதிக்கும் கல்விக்கூடம் முழு அனுமதி வாங்கின பின்னரே நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்