ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
ஓகி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க கேட்டு இன்று முமு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க போன மீனவா்கள் பலா் உயிரிழந்து இருப்பதாகவும் மேலும் கேரளா, மகாராஷ்டிரா, லட்சத்தீவு கடல் பகுதியில் 500 க்கு மேற்ப்பட்ட மீனவா்கள் மாயமாகி இருப்பதாகவும் மீனவா்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் இறந்த இரண்டு மீனவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன மீனவா்களை தேடிவருவதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இறந்து போன கேரளா மீனவா்களுக்கு அந்த அரசு 25 லட்சம் ருபாயும் ஓருவருக்கு அரசு வேலையும் அறிவித்தது. இதை தொடா்ந்து புயலில் இறந்து போன குமரி மாவட்ட மீனவா்களுக்கும் கேரளா அரசு அறிவித்தது போல் உதவி தொகை வழங்க கேட்டு கடந்த 7-ம் தேதி தூத்தூா் மீனவா்கள் ஆயிரக்கணக்கானோர் குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக குமரி மவட்டத்தில் பல்வேறு இடங்கள் உட்பட தமிழகத்தில் பல மாவடங்களில் குமரி மீனவா்களுக்கு ஆதரவாக மறியல் மற்றும் போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் தூத்தூருக்கு 12-ம் தேதி வந்த முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி உயிரிழந்த மீனவா்களுக்கு 20 லட்சமும் குடும்பத்தில் ஓருவருக்கு வேலையும் அறிவித்தார்.
இந்த நிலையில் புயலால் லட்சகணக்கான வாழை, தென்னை, ரப்பா் மற்றும் விவசாய பொருட்களை இழந்து பரிதவிக்கும் விவசாயிகளுக்கும் மற்றும் வீடு இடிந்தும் மரங்கள் முறிந்து விழுந்தும் உயிரிழந்த விவசாயிகளுக்கும் மீனவா்களுக்கு வழங்குவது போல் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தக்கலையில் ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக பா.ஜ.க வினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனா். அரசை கண்டித்து முமு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனா்.
இதனை தொடா்ந்து இன்று குமரி மாவட்டத்தில் கடைகள், ஓட்டல்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் பூட்டப்பட்டுள்ளன. மேலும் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் ஒடவில்லை. அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. கேரளா அரசு பேருந்துகள் களியக்காவிளை எல்லையில் வந்து திரும்பி செல்கிறது. இதனால் மக்களின் சகஜ வாழ்ககை வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தக்கலை, திருவட்டார், குலசேகரம், மீனாட்சிபுரம், சுசிந்திரம் உட்பட பல இடங்களில் மா்ம நபா்களால் அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. இந்த விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மணிகண்டன்