கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பிரபல எண்ணெய் கடையான ஸ்ரீ மாலையம்மன் எண்ணெய் கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். எண்ணெய் பொருட்களை பாக்கெட்டுகளில் மட்டுமே விற்க வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் அதனை மீறி சில்லறை விலையாக விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்ற நிலையில் அங்கு கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, ''இங்கு இவ்வளவு பெரிய கலப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்கு சிறை தண்டணையுடன் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு தண்டனை கிடைக்கும். இது போன்ற சோதனைகளுக்கு காரணம் தமிழக முதல்வர் தான். தமிழக முதல்வர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சரின் துரித நடவடிக்கைகளால் மட்டுமே இவை தடுக்கப்பட்டு வருகிறது. எந்த விதத்திலும் கலப்படங்கள் இருக்கக் கூடாது என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. எங்களுடைய ஹேண்ட் ஃப்ரி ஹேண்ட்ஸ் ஆக இருப்பதால் வேகமாக நல்லதை செய்ய முடிகிறது. 9444042322 என்ற இந்த வாட்ஸ் அப் நம்பரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் உணவுப்பொருள் சம்பந்தமான புகாரை தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம். 12 மணி நேரத்திலிருந்து 42 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.