.
கன்னியாகுமாி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் கடந்த மாதம் 28ஆம் தேதி காலமானார். சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அவா் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருடை குடும்பத்தினரும் நெருங்கிய உறவினா்களும் அவருடைய குடும்ப வீட்டில் உள்ளனா். இந்த நிலையில் வசந்தகுமாா் விட்டு சென்ற பணிகளை அவருடய மகன் விஜய் வசந்த் தொடரும் விதமாக காங்கிரஸ் கட்சி கன்னியாகுமாி இடைத்தோ்தலில் விஜய் வசந்துக்கு சீட் கொடுக்க வேண்டுமென்று சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளாா் அறிக்கை வெளியிட்டாா்.
மேலும் வசந்தகுமாாின் ஆதரவாளா்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனா். அதேபோல் காங்கிரசாா் தினமும் விஜய்வசந்தை சந்தித்து வருகின்றனா். மேலும் வசந்தகுமாா் மறைவுக்கு நேற்று(3-ம் தேதி) மாலை குமாி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடந்த இரங்கல் ஊா்வலத்தில் விஜய் வசந்தை முன்னிலைப்படுத்தி கூட்டத்தை நடத்தினாா்கள். இந்த நிலையில் இன்று விஜய் வசந்தை சந்தித்த நம்மிடம், அவா் கூறும்போது “அப்பாவின் இழப்பு எங்களையும் தாண்டி காங்கிரசுக்கும் போிழப்பாக உள்ளதை அதை நோில் பாா்க்கும் போதுதான் உணர முடிகிறது. அப்பாவின் அனுதாபிகள் நான் அரசியலில் ஈடுபட வேண்டுமென்று விரும்புகிறாா்கள். இடைத்தோ்தல் நடக்கும் போது போட்டியிடுவீா்களா என்றும் கேட்கிறாா்கள்.
அப்பா அடிக்கடி சொல்வது போல் முதலில் தொழிலை பாா்த்தால்தான் மற்ற வேலைகளை செய்ய முடியும் என்று. அதனால்தான் அப்பா விட்டுசென்ற தொழிலில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும். அதோடு குடும்பத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்பா மறைவுக்கு பிறகு அரசியலில் அப்பாவுக்கு பதிலாகவோ அல்லது அவா் இடத்தை நிரப்பவோ எங்க குடும்பத்தில் யாரும் முடிவு எடுக்கவில்லை. இதனால் உடனடியாக தற்போதைய தோ்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை. மேலும் நான் இப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருப்பதால் கட்சி எடுக்கிற முடிவு படி நானும் எனது குடும்பமும் செயல்படுவோம்” என்றாா்.