Skip to main content

மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 வரை அனுமதியில்லை! -உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

 Not allowed on Marina Beach until October 31st! -Corporate information in the High Court!

 

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை, பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையைச் சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இருமுறை திறக்கப்படவில்லை. நவம்பர் 9-ம் தேதி, இந்த டெண்டர்கள் திறக்கப்படும் என, மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளன.

மெரினாவை பொதுமக்களுக்கு திறப்பதைப் பொறுத்தவரை, தமிழகத்தில் ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவைத் திறப்பது உள்ளிட்டவை தொடர்பாக, நவம்பர் 11-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத்  தள்ளிவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்