Published on 08/02/2019 | Edited on 08/02/2019
தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடையிலான 10 கிலோ மீட்டர் இடைவெளியில் தான் டோல்கேட் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் மொரட்டாண்டி டோல்கேட் புதுச்சேரியில் இருந்து 5 கிலோமீட்டர் இடையிலான பகுதியில் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆறுமுகம் என்ற வழக்கறிஞர் வானூர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கொடுத்தார். இதனையடுத்து இன்று வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன் வருகிற 20-ஆம் தேதி வரை டோல்கேட்டை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் இரண்டு வாரங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம் என்பதால் வாகன ஓட்டிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.