தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, சிந்தாமல் சிதறாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்புகிறோம். 29ம்தேதி வரை அவகாசம் உள்ளது அதுவரை பொறுத்திருப்போம். 29ஆம் தேதிக்குள் காவிரி வாரியம் அமைக்காவிடில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
ஸ்டெர்லைட் பிரச்சனையிலும் மக்கள் கருத்தின்படி அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது. எதிர்கட்சியாக இருப்பதால் வாய்க்கு வந்ததை ஸ்டாலின் பேசக்கூடாது. எல்லா விஷயங்களிலும் இவர்களுக்கு பங்கு இல்லாது, அனைத்தையும் நாங்களே செய்தது போல் பேசுவது தவறு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.