'நிவர்' புயலானது இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையைக் கடக்க தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்பொழுது 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நிவர் புயல் புதுச்சேரி அருகே நள்ளிரவு கரையைக் கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்பொழுது புதுச்சேரியில் இருந்து 55 கிலோ மீட்டரிலும், கடலூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிவர் புயலானது நிலைகொண்டுள்ளது. புயலின் நகரும் வேகம் 14 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து தற்பொழுது 16 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. நிவர் புயல் முழுமையாகக் கரையைக் கடக்க, நள்ளிரவு 3 மணி வரை ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.