Skip to main content

”தயவுபண்ணி என்னைக் கூட்டிட்டுப் போங்க” -நிர்மலாதேவி பரிதவிக்கும் ஆடியோ!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

 

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஜோபு ராம்குமார், பேராசிரியை நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டியின் வழக்கறிஞர் ஆவார். அந்த முறையில், தற்போது நிர்மலாதேவிக்கு உதவிடும் நோக்கத்தில் அவரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது, தன்னுடன் நிர்மலாதேவி பேசிய ஆடியோவை..  அதாவது நிர்மலாதேவியின் தற்போதைய பரிதவிப்பை.. உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு நக்கீரனுக்கும் அனுப்பியிருக்கிறார். 

 

n

 

நிர்மலாதேவி – ஜோபு ராம்குமார் செல்போன் உரையாடல் இதோ - 

“ஹலோ சார்.. என்னை மன்னிச்சிக்கங்க.. நேற்று எதுவும் கோபமாகப் பேசியிருந்தால், மன்னிச்சிக்கங்க. ஏன்னா.. இப்ப கொஞ்ச நாளா, நான் நானாவே இல்ல. ஆன்மிக ரீதியாகப் போவதா? என்ன ரீதின்னு ரொம்ப கஷ்டமா இருக்கு. சைக்கியாட்ரிக் ட்ரீட்மெண்ட் வேணும்னு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தஞ்சாவூர்ல பால்மர் அண்ணாவோட சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயி நான் பார்த்துட்டு வந்தேன். இப்ப தினம் தினம் ஒவ்வொரு கூத்தா நடந்துக்கிட்டிருக்கு. அதனால, எனக்கு தயவு பண்ணி உங்களுக்குத் தெரிஞ்ச சைக்கியாட்ரிஸ்ட் யார்ட்டயாச்சும் என்னைக் கூட்டிட்டுப் போயி.. தயவு பண்ணி..” 

 

“அதுதான் நேற்று அவர் சொன்னாருன்னு.. வீட்டுக்காரர்கிட்ட சொல்லி.. சிநேகா ரொம்ப நல்லாருக்கு. அதுல வேணும்னா கூடவே இருந்து பார்த்துக்கிறேன்னு சொன்னா… சொல்ல விட்டீங்களா என்னைய?”

 

“கூப்பிட்டு போங்க.. மதுரைக்கு.. தயவு பண்ணி.. தயவு பண்ணி மதுரைக்கு கூட்டிட்டு போங்க.”

 

“சிநேகா.. திருநெல்வேலில  இருக்கிறாரு.. திருநெல்வேலில பார்த்துக்கிறேன்னு சொல்லி கூப்பிட்டாரு. சிநேகா வந்து..”

 

“சரி ஓகே. அதுனாலும் சரி. திருநெல்வேலின்னாலும் சரி. எங்கேயே ஒரு இடத்துல..”

 

“ஒரு நிமிஷம் நான் சொல்லி முடிச்சிடறேன். இருக்கிறதுலயே டாப் சிநேகா. அருமையான ஹாஸ்பிடல் சினேகா.”

 

“சரி.. உடனே என்னை கூட்டிட்டுப் போங்க சார். எனக்கு, டெய்லி. டெய்லி பெரிய பெரிய பிரச்சனைகளா வந்துக்கிட்டிருக்கு. அதனால, தயவு பண்ணி கூட்டிட்டுப் போங்க. இப்பவே நான் கிளம்புறதுக்கு ரெடியா இருக்கேன்.” 

 

“சரின்னு சொல்லி வச்சிருந்தேன். இனி எப்படி நான் அவரை சரி பண்ணுவேன்.?” 

 

“தயவு செய்து இப்ப பேசுங்க. பேசிட்டு என்னைக் கூப்பிடுங்க. நான் ரெடி ஆயிடறேன். தயவு பண்ணி. நீங்களே பார்த்தீங்கள்ல.. எப்பவுமே அப்படி நான் பேசக்கூடியவளா?  இல்லைல்ல.. ரொம்ப ரொம்ப மோசமான சூழ்நிலைல போய்க்கிட்டிருக்கு இப்ப டெய்லி. அதனால, தயவுபண்ணி என்னைக் கூட்டிட்டுப் போங்க.” 

 

“சரி நான் பேசிட்டு கூப்பிடறேன். இருங்க..”

 

“ஒகே.ஓகே. நன்றி! நன்றி!”

 

l

 

சிறையில் இருந்தபோதுகூட, நிர்மலாதேவியைச் சுற்றி பல பெண் கைதிகள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒருவிதத்தில் அந்தச் சூழ்நிலை அவருக்கு ஆறுதலாக(?) இருந்ததால், சிறையில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் போட்டியிலெல்லாம் கலந்துகொண்டு, அவரால் பரிசு பெற முடிந்திருக்கிறது. தற்போதைய நிலைமை அப்படி கிடையாது. வேலை இல்லை, பண நெருக்கடி, கணவர், குழந்தைகள் மற்றும் சொந்த பந்தங்கள் முற்றிலும் புறக்கணித்தது எனத் தன் வீட்டில் தனிமைச்சிறையில் இருப்பதாகவே அவர் உணர்ந்திருப்பார் போலும். எல்லா பிரச்சனைகளில் இருந்தும் ஒரேயடியாக விடுபட, அவருடைய மனது, தன் இஷ்டத்துக்கு அவரை அவ்வப்போது ஆட்டிப்படைப்பதை உணர்ந்தே, ஜோபு ராம்குமாரிடம் செல்போனில் பேசியிருக்கிறார். அதனால்தான், உளவியல் சிகிச்சை மேற்கொள்வதற்கு தான் ஆயத்தமாக இருப்பதை பரிதவிப்போடு சொல்கிறார். 

 

இந்த மன அழுத்தம்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி நம்மிடம் பேசியபோது, “நான் தனியாளு இல்ல..” என்று குமுறலாக வெடிக்க வைத்திருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்