Published on 09/07/2019 | Edited on 09/07/2019
நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலும், அருப்புக்கோட்டை தர்காவிலும் கலாட்டா வைக் கட்டவிழ்த்து விட்ட நிர்மலாதேவி, போலீஸ் எச்சரித்ததும், நார்மல் மோடுக்குத் தன்னை மாற்றிக் கொண்டு, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

சூரியன் மறைந்து, இருட்ட ஆரம்பித்த பிறகே, அடுத்த கட்ட நிலவரத்தைச் சொல்ல முடியும் என்று திகில் கிளப்புகிறார்கள், அந்த ஏரியாவாசிகள். ஏனென்றால், கடந்த இரண்டு நாட்களாக, இரவு நேரத்தில் அங்குள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, அந்தப் பகுதியே அதிரும் அளவுக்கு இடைவெளி விடாமல் மணியை அடித்து இம்சையைக் கூட்டினாராம் நிர்மலாதேவி.

தன் மனக்கஷ்டம் நீங்குவதற்கும், அதனை மறப்பதற்கும், பிறரைக் கஷ்டப்படுத்தி 'தப்பிக்கும்' மனநிலைக்கு அவ்வப்போது மாறுபவராக இருக்கிறார், நிர்மலாதேவி!