Skip to main content

எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லை: அதனால் பேச முடியவில்லை: நிர்மலா விவகாரத்தில் முருகன் பேட்டி

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
murugan nirmala devi



கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

 
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 
 

இன்று இந்த வழக்கு விசாரணைக்காக இவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
 

காவல்துறை வேனில் இருந்து இறங்கிய முருகனிடம், நேற்று கோர்ட் உள்ளே போகும்போது பத்திரிகையில் வெளிவந்த நிர்மலா தேவி வாக்குமூலம் பொய் என்று  பேசினீர்கள். பிறகு பேசவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 

அதற்கு அவர், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை. கோர்ட் உத்தரவாதம் கொடுத்தால் பிணை கிடைத்தவுடன் வெளியே வந்து அனைத்தையும் சொல்லுவேன் என்றார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்