Skip to main content

கடைசி சட்ட வாய்ப்பும் பலனளிக்கவில்லை; நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு உறுதியானது!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020
n

 

கடைசி சட்ட வாய்ப்பும் பலனளிக்காது போனதால் நிர்பயா கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது.


டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் இந்த தண்டனையை உறுதி செய்தன. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.   இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, திகார் சிறையில் அவர்களை தூக்கிலிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

 
இந்நிலையில்,  குற்றவாளிகளில் வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தூக்கு தண்டனையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். குற்றவாளிகளுக்கான கடைசி சட்ட வாய்ப்பு இதுவாகும்.  இந்த மறுசீராய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கில் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறி, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் குற்றவாளிகள் வரும் 22-ம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

சார்ந்த செய்திகள்