Skip to main content

தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ்? - சுகாதாரத்துறை செயலர் பதில்

Published on 21/05/2018 | Edited on 22/05/2018
nipha

 

 

 

நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையாக தாக்கும் வல்லமையை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் நிபா வைரஸ் தொடர்பாக தீவிர ஆய்வில் மத்திய அரசு சார்பாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் கேரள சுகாதாரதுறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கூறியுள்ளார். மேலும் இதே போன்று நிபா வைரஸ் காய்ச்சல் வங்கதேசத்திலும் பரவியதாகவும், அப்போது அதனை அந்நாட்டு அரசு லாவகமாக கையாண்டு, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றியதையும் ராஜீவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை  தாக்கும் ஒரு நோய் கிருமி என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது முதன் முதலில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 1998-1999 ஆம் ஆண்டுகளில் பன்றிகளில் இருந்து மனிதர்களிடம் பரவியது. இதனைத்தொடர்ந்து நிபா வைரஸின் தாக்குதலால் 265 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் குதிரையிலிருந்து மனிதர்களுக்கும், சில குறிப்பிட்ட வகை வௌவால்களிலிருந்தும் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


நிபா வைரஸின் முக்கியமான அறிகுறிகள் ,லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். நிபா வைரசுக்கு என்று தனிப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ கிடையாது. ஆனால் இந்த வைரஸை தரமான நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

 

 


அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், திறந்தவெளி  குடிநீரை குடிக்க கூடாது என்றும் மரத்தில் இருந்து கீழே விழும் பழங்களை உண்ண கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன்,   தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் பரவவில்லை.  நிபா வைரஸ் குறித்த அச்சம் மக்களுக்கு தேவையில்லை.  நாங்கள் இந்த பிரச்சனை சூழ்நிலையை தொடர்ந்து கண்கானி்த்து தான் வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் தெரிவித்து உள்ளோம். இதைப்பற்றிய மக்கள் கவலைபடவேண்டியது இல்லை என்றார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

"நகர்ப்புற மக்கள் வாக்களிக்கத் தவறிவிட்டனர் " - ராதாகிருஷ்ணன் ஆதங்கம் !

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Urban people have failed to vote says Radhakrishnan

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையை திறக்க இரண்டு  சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும். ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது" என்று கூறினார்.

Next Story

'சிங்கப்பூரில் பரவும் உருமாறிய கொரோனா தொற்று' -அமைச்சர் மா.சு பேட்டி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
'Transformed corona infection spreading in Singapore' - Minister M. Su interview

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தாக்குதல் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நேற்றிலிருந்து தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வேளச்சேரியில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களுக்கு அரை கிலோ ப்ளீச்சிங் பவுடர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''வீடுகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சம்ப் என்று சொல்லக்கூடிய அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் போன்ற நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி ,ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்படுகின்ற மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படுபவர்களுக்கு அனைவருக்கும் 1/2 கிலோ ப்ளீச்சிங் பவுடரும் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா என்பது 2019 இறுதியில் தொடங்கி பல்வேறு வகைகளில், உருமாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு வசதியாக 98 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு மூன்று தடுப்பூசியை போட்டு இன்று தமிழக மக்கள் இடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் என்பது தொடர்ச்சியாக பல வழிகளில் வந்து கொண்டிருக்கிறது.

கொரோனா என்றும்; ஆல்பா  என்றும்; பீட்டா என்றும்; டெல்டா என்றும்; டெல்டா பிளஸ் என்றும்; ஒமிக்கிரான் என்றும் கூட பல்வேறு வகைகளில் இந்த ஒரு மாற்றங்கள் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிங்கப்பூரில் நிறைய பேருக்கு ஒரு மாதிரியான கொரோனா தொற்று பரவல் இருப்பது அறியப்பட்டது. உடனடியாக சிங்கப்பூரில் இருக்கக்கூடிய 'நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்' அமைப்பில் பணியாற்றுகின்ற மருத்துவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களிடம் கேட்டபோது, அவர்கள், ஒரு பாசிட்டிவான நோயாளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் நெகட்டிவ் ஆகிவிடுகிறது, இது இருமல் மற்றும் சளி ஆகிய இரு உபாதைகளை மட்டுமே கொடுக்கிறது என்கின்ற வகையில் அவர்கள் நேற்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.