சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை, இன்று காலை டிடிவி தினகரன் சந்தித்தார். இன்று சசிகலாவுக்கு பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மேலூர் பொதுக்கூட்டம், ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லம் அரசு நினைவில்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு, ஜெ. மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை போன்ற விசயங்கள் குறித்து ஆலோசித்தார்.