Skip to main content

என் அக்கா எங்கே...? விமான நிலையத்திலேயே கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமி!

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

 The news that made Dhanalakshmi cry ...

 

திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (22). சேகர் – உஷா தம்பதியரின் மகளான தனலட்சுமி சிறந்த தமிழக தடகள வீராங்கனை. இவர் பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றிருக்கிறார். ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு அவர் தேர்வாகி இருந்தார். இதில் பங்கேற்க அவர் டோக்கியோ சென்றிருந்தார்.

 

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் தனலட்சுமி பங்கேற்றிருந்த சமயத்தில் அவர் அக்கா கடந்த 12. 7. 2021 தேதியன்று திடீரென உயிரிழந்துவிட்டார். இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால் அவர் விளையாட்டுப் போட்டியிலிருந்து கவனம் சிதறி விடுவார் என்று அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் யாரும் அவருக்கு தெரியப்படுத்தாமல் இருந்துவிட்டனர். இந்நிலையில் டோக்கியோவில் போட்டி முடிந்து தமிழகம் திரும்பிய தனலட்சுமி நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கே வரவேற்க தன் அக்கா ஏன் வரவில்லை என்று தேடி இருக்கிறார் தனலட்சுமி. அப்போதுதான் அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

திடீரென்று இப்படி ஒரு செய்தியை கேட்ட தனலட்சுமி, விமான நிலையத்திலேயே கதறி அழுதார். குடும்பத்தினரும் உறவினர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றி பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்