சனாதான மனுதர்மத்தை பாதுகாத்திடும் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து பந்தநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் கடைவீதியில் 30- ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு துவங்கிய பொதுக்கூட்டத்திற்கு திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் முருகப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழருவி எழுச்சியுறை நிகழ்த்தினார். அக்கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் காஞ்சி பார்வேந்தன் சனாதன பயங்கரவாதம் குறித்தும், புதிய கல்விக்கொள்கை குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், "புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் மோடி அரசு இரண்டாயிறம் ஆண்டுகளுக்கு பின்னால் தள்ள முயல்கிறது. இந்தியா பல்வேறு மொழிகளை, மக்களை உள்ளடக்கிய ஒரு நாடு, இந்த நாட்டில் பாஜக அரசு சமஸ்கிருதம், இந்தி என்கிற பெயரில் சிதைக்க துடிக்கிறது. மோடி அரசுக்கு மற்ற மாநிலங்கள் இலக்கு அல்ல, தமிழகம் தான். அதனால் தான் புதிய கல்வி கொள்கை மூலம் தமிழை அழிக்கத்துடிக்கிறார். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அதன் அடையாளமான மொழியையும், கல்வியையும் ஒழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும். அந்த தொலைநோக்கு திட்டம் தான் மோடி அரசின் புதிய கல்வி." என்று விரிவாக பேசினார்.