கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ரமேஷ் போக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் கடந்த 29-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்திருந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது தலைமை செயலகம் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு முழு எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தோழமை கட்சிகள் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.