Skip to main content

மறைந்த நிருபருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

முரசொலி நாளிதழின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிருபராக பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் (55). இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் நேற்று ஸ்டாலின் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திலிருந்ததை இரவு வரை கவரேஜ் செய்தவர் நெல்லையில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இரவு பதினோரு மணியளவில், அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே நண்பர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் சங்கரன்கோவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

nellai murasoli reporter passed away dmk mk stalin meet reporter family



இது குறித்து தகவலறிந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் வந்த தி.மு.க. அமைப்பு செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் இன்று மதியம், அவரது இல்லத்துக்கு வந்து அமணிகண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மேலும் ஊடக நண்பர்கள், நகர மக்கள் மற்றும் தி.மு.க.வினர் திரளாக வந்து மணிகண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.