நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்ததுள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் தமிழகத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த விவகாரம் தமிழகத்தில் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இந்த சூழ்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இன்று முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை எதிர்க்கட்சிகள் நீட் தொடர்பாக பிரச்சனை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.