கடந்த மாதம் 12 ஆம் தேதி நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக தருமபுரி தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்துவந்த மாணவி தாயருடன் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அந்த மாணவியும், தாயும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர் .ஏற்கனவே இந்த ஜாமின் மனுவானது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் சிபிசிஐடி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சார்பில் மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் எனவே தாய்க்கு ஜாமின் வழங்கக்கூடாது என கோரப்பட்டது. மாணவியின் சகோதரி ஒரு மாற்றுத்திறனாளி எனவே அவரை பராமரிப்பது மற்றும் மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவிக்கு மட்டும் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் தாயின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும் மாணவியின் சகோதரி மாற்றுத்திறனாளி என்பதால் அந்த மாணவிக்கு நிபந்தனை இல்லா ஜாமின் வழங்கப்பட்டது.