மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது.
தேர்வு மையத்துக்கு நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஹால்டிக்கெட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவிட்ட பாஸ்போர்ட் புகைப்படம் சுய அடையாள ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.
தேர்வு எழுத பால்பாயிண்ட் பேனா 1 தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோமெட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் அனுமதி கிடையாது.
மொபைல் போன், ப்ளூடூத், பென்டிரைவ், கைகடிகாரம், கை கேமரா, காதணி, வளையல் இது போன்ற ஆபரணங்களுக்கும் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லை. மென்மையான நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும் மாணவர்கள் அரைக்கை சட்டை அணிய அனுமதி உண்டு. முழுக்கைச் சட்டை அணியக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் கோலா சரஸ்வதி சீனியர் செகன்ட்ரி ஸ்கூலில் தேர்வர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.