கரூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை மீண்டும் களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் வாக்காள மக்களை சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அப்பொழுது வேடசந்தூர் அருகே உள்ள லந்தக் கோட்டையில் அதிமுக வேட்பாளரான தம்பிதுரை மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் பரமசிவம் தலைமையில் ர.ர.க்கள் ஓட்டு கேட்டு ஊருக்குள் சென்றனர். அதைக் கண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து தம்பிதுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊருக்குள் வரக்கூடாது என்று போராட்டத்தில் குதித்த மக்களோ, எங்கள் பகுதிக்கு பல ஆண்டுகளாக குடிக்கத் தண்ணீர் இல்லை என்று பலமுறை உங்களிடம் மனு கொடுத்தும் கூட கண்டுகொள்ளவில்லை. அதனால் கடந்த ஐந்து வருடமாகவே கலங்கலான தண்ணீர் தான் குடித்துவருகிறோம். நீங்க ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஓட்டு கேட்டு வாங்கிட்டுபோவதோடு திரும்பிப் பார்ப்பதும் இல்லை. அப்படி இருக்கும்போது எதற்காக மீண்டும் எங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறீர்கள் என்று வாய்க்கு வந்தபடி பொதுமக்கள் பேச ஆரம்பித்தனர்.
அப்பொழுது ஊரில் உள்ள இளைஞர்களை சிலர் வாட்ஸ்அப் மூலம் வீடியோ எடுத்ததை கண்டு தம்பிதுரை பதறிப்போய் எடுக்காதீங்க என்று சத்தம் போட்டார். அதற்கு பொது மக்களோ, அப்படித்தான் எடுப்பானுங்க. என்ன ......த்துக்கு ஓட்டு கேட்டு ஊருக்குள் வர... என்று சத்தம் போட்டனர். அதோடு கலங்கலான தண்ணீர் பாட்டிலையும் தம்பிதுரையிடம் கொடுத்து இந்த தண்ணியை குடித்து பார். எவ்வளவுகலங்க தண்ணியை குடித்து வருகிறோம் என்று கூறி வாக்காள மக்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். இதனால் டென்சன் அடைந்த தம்பிதுரையும் தொகுதி எம்எல்ஏவான பரமசிவமும் பொதுமக்களுக்கு பயந்து லந்தக் கோட்டையை விட்டு ஓடிவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .