Skip to main content

'நீட் ஆய்வுக்குழு- அதிகார வரம்பை மீறிய செயல்'- உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

NEET EXAM CHENNAI HIGH COURT UNION GOVERNMENT

 

நீட் தேர்வு தாக்கம் பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டதற்கு எதிராக பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், "நீட் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய குழு நியமித்தது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை நியமிக்க இயலாது. நீட் தேர்வு தாக்கம் பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது. சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பு உள்ளதா என ஆராய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்