நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
நீட் தேர்வு தொடர்பாக உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளது?
இதில் அரசியல் கட்சியினர் எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளனர்?
அவை அமைதியான முறையில் நடத்தப்பட்டதா?
மாணவர்கள் ஈடுபட்ட போராட்டங்கள் எத்தனை?
போராட்டம் தொடர்பாக எத்தனை மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது?
எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
அரசியல் கட்சியினரை தவிர்த்து இந்த போராட்டத்தை வேறு ஏதேனும்தனியார் அமைப்புகள் தூண்டி விடுகிறதா?
நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாகவும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது தொடர்பாகவும் ஏன் தமிழக அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை?
போராட்டம் காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடாது?
நீட் தேர்வுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?
என்பது குறித்து நாளை பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சி.ஜீவா பாரதி