Skip to main content

நீட் தேர்வு முடிவுகள்... -தமிழகத்தில் 57.44% பேர் தேர்ச்சி

Published on 16/10/2020 | Edited on 16/10/2020
g

 

 

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 14.37 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் 1.21 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இந்த தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இது கடந்த ஆண்டை விட அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 48.57 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 57.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

இந்த தேர்வில் திருப்பூர் மாணவர்  ஸ்ரீஜன் 710  மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் முதல் 40 இடங்களில் இவர் மட்டுமே தமிழகத்தின் சார்பில் இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 720 மதிப்பெண் பெற்று ஒடிசா மாணவர் சோயப் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்