அண்ணாமலைப் பல்கலைக்கழக தொண்ணூறாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் எழுபத்திமூன்றாவது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் யோகக்கல்வி மையம் சார்பில் தொற்று நோய் அல்லாத நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும் நோய்வராமல் தடுப்பதற்குமான யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை யோகக் கல்வி கூட அரங்கில் நடைப்பெற்றது. பயிற்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். யோக மைய இயக்குநர்(பொ) முனைவர் கி.வெங்கடாஜலபதி வரவேற்றார். கல்வியியல் புல முதல்வர் ஞானதேவன் தலைமை உரையாற்றி யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் இன்றைய கால சூழ்நிலையில் நோய் வருவதற்கான காரணங்கள், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படக்கூடிய இன்றைய சமுதாயத்தை அச்சுறுத்த கூடிய நோய்களான இரத்த அழுத்தம், இருதய நோய், சர்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற வற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நம் தமிழர் பாரம்பரிய முறையான இயற்கை மருத்துவமும், யோக வாழ்வியல் முறையும் ஜப்பானிய தண்ணீர் சிகிச்சை முறை பற்றியும் சிறப்பாக அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிய முறையில் எடுத்துரைத்தார்.
யோகா மைய இயற்கை மருத்துவர் ருக்மணி தொற்று அல்லாத நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் உறையாற்றினார். யோகா பயிற்றுனர்கள் சாந்தி, பார்த்தசாரதி, முடக்கு நீக்கியல் மற்றும் யோக பயிற்சியாளர் தயாளன் ஆகியோர் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றவர்களுக்கு பயிற்சியளித்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழகத்தை சார்ந்த ஏராளமான பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பல்வேறு துறைசார்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும்பாலனோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான அனைத்து எற்பாடுகளையும் யோகா கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.