Skip to main content

'மூளைச் சலவை செய்து அழைத்துச் செல்லப்பட்ட பெண்...'- நித்தி சிஷ்யைகளை விரட்டியடித்த பொதுமக்கள்!

Published on 06/09/2021 | Edited on 07/09/2021

 

'The woman who was brainwashed and taken away ...' - The public who chased away the niththi disciples!

 

நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் வந்த காரை பொதுமக்கள் வழிமறித்த சம்பவம் நாமக்கல்லில் நிகழ்ந்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. மளிகைக் கடை வைத்திருந்த ராமசாமியின் மனைவி அத்தாயி நித்தியானந்தாவின் மீது பக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டணம் பகுதியில் இருந்த நித்தியின் தியான பீடத்திற்கு அடிக்கடி சென்றுவந்த அத்தாயி கடந்த 2017 ஆம் ஆண்டு தனது பெயரில் இருந்த நிலத்தின் மீது 6.40 லட்ச ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு கணவரின் விருப்பம் இல்லாமல் பெங்களூரில் உள்ள நித்தி ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். பலமுறை குடும்பத்தினர் வலியுறுத்தியும் அத்தாயி வீட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. வங்கி கடனுக்கான வாய்தா முடிந்த நிலையில் அந்த பெண் சிஷ்யையின் வீடு ஜப்திக்கு வந்துள்ளது.

 

'The woman who was brainwashed and taken away ...' - The public who chased away the niththi disciples!

 

namakkal

 

பெண்ணின் கணவர் பலமுறை கேட்டுக்கொண்டதன் பேரில், கையெழுத்து போட்டவுடன் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அத்தாயி இரண்டு பெண் சிஷ்யைகளுடன் அனுப்பிவைக்கப்பட்டார். ஜப்தியை நீக்க வேண்டும் என இன்று அந்த பெண் காரில் நாமக்கல் வந்துள்ளார். அவருடன் ஒரு ஆண் இன்னொரு சிஷ்யையும் காரில் வந்துள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் நித்தியின் பெயர் சொல்லி பெண்களை மூளைச் சலவை செய்து அழைத்துச் சென்றதாகக் கூறி காரை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்ணை மீட்ட கணவர் மற்றும் குடும்பத்தினர், உடன் வந்த நித்தி சிஷ்யை மற்றும் ஆட்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்