Skip to main content

போலீஸ் விசாரணையிலிருந்தவர் மர்ம மரணம்

Published on 15/08/2017 | Edited on 15/08/2017

போலீஸ் விசாரணையிலிருந்தவர் மர்ம மரணம்



நெல்லை மாவட்டத்தின் ஆலங்குளம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரியாக்களில் அண்மையில் திருட்டு மற்றும் வழிப்பறி நடந்து பீதியைக் கிளப்பவே ஆலங்குளம் போலீசார் இரவு நேர சோதனையிலிருந்தார்கள். நேற்று முன்தினம் இரவு நகரில் ஒரு திருட்டு முயற்சி நடக்கவே அது தொடர்பான விசாரணையிலிருந்திருக்கிறார்கள். சோதனையிலிருந்த போது தகவல் கிடைத்த குறிப்பிட்ட அந்தக் காரை மடக்கிச் சோதனை நடத்தியதில் உள்ளே ஆயுதத் தோடிருந்தவரைப் பிடித்து விசாரித் திருக்கிறார்கள். 

அவர் நல்ல போதையிலிருந்திருக்கிறார். விசாரணையில் அவர் ஆலங்குளம் அருகில் உள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் விசாரணையில் முரண்பட்ட தகவலைச் சொல்ல சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் கொண்டு வந்திருக்கிறார்கள் மேலும் அவர் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட கொள்ளை வழிப்பறி, என்று ஆலங்குளம் பாப்பாக்குடி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையிலுள்ளன.

இந்த நிலையில் போலீசாரின் விசாரணையிலிருந்த பழனி நேற்று அதிகாலை நெஞ்சு வலிக்கிறது என்றிருக்கிறார். உடனே அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு அவரைச் சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதைத் தெரித்திருக்கிறனர். போலீஸ் காவலில் இருந்தவர் மர்மமான வகையில் மரணமடைந்தது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.அருண்சக்திகுமார் ஆலங்குளம் நகரில் முகாமிட்டு விசாரணை நடத்திவருகிறார்.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்