Skip to main content

பண்ருட்டி வாலிபர் கொலையில் 3 பேர் கைது... கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
police

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்திலுள்ள பெரிய ஏரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய ஒரு வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜி, சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் சக போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொலையாளியை தீவிரமாகதேடி வந்தனர். இந்தநிலையில் படுகொலைசெய்யப்பட்டவர் பண்ருட்டி ரகமத்துல்லா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது பரக் மகன் சதாம் உசேன் வயது 33 என்பதும் இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளிவாசலில் இமாமாக பணி செய்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சதாம் உசேன் வீட்டிலிருந்துவந்தபோது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு அவர்கழுத்து அறுக்கப்பட்டு பெரியபட்டுஏரியில் சடலமாக விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. 

 

இந்த படுகொலை தொடர்பாக முக்கிய தடயங்களை வைத்து மூன்று பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அவர்கள் பண்ருட்டி பள்ளிவாசல் இமாம் சதாம் உசேனை எலவசனூர்கோட்டையை சேர்ந்த காசிம் அன்சாரி' அஷ்ரப் அலி யாசர் அரபாத உட்பட நான்கு பேர் சேர்ந்து சதாம் உசேனை கொலை செய்தது தெரியவந்தது.

 

இதையடுத்து காசிம் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி இருசக்கர வாகனம் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிவாசல் இமாம் அவர்கள் அவருடன் நட்பில் இருந்தவர்களே இருசக்கர வாகனத்தில் அழைத்துவந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்து ஏரியில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் கடலூர் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை பண்ருட்டி ஆகிய பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்து இரண்டு நாட்களுக்குள் கொலையாளிகளை புலனாய்வு செய்தி கைது செய்து போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்