Skip to main content

திருவாடானையில் விதி முறைக்குமாறாக வெடிக்கடைகள், பொது மக்களுக்கு ஆபத்து

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
திருவாடானையில் விதி முறைக்குமாறாக வெடிக்கடைகள், பொது மக்களுக்கு ஆபத்து

திருவாடானையில் விதிமுறைக்கு மாறாக உரிய உரிமம் இல்லாமல் வெடிக் கடைகள் புதிதாக முளைக்கின்றன. இப்படி முளைக்கும் வெடிக்கடைகளுக்கு உரிய உரிமம் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட இடத்தில் வைக்காமல் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் விதிக்கு மாறாக வெடிக்கடைகள் வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். 

ஏற்கனவே வெடிக்கடைகளை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் ஆய்வு செய்ததில் விதிமுறைக்குமாறாக செயல்பட்டுவந்த மூன்றுக்கும் மேற்பட்ட வெடிக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்ட்டுவிட்டதாக தகவல் உள்ள நிலையில் இவ்வாறு விதிமுறைக்குமாறாக அதிகாரிகளை சரி செய்து விதிமுறைக்கு மாறான கடைகள் முளைக்க தொடங்கிவிட்டன. இதில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஆரம்ப கட்டத்திலேயே நடவடிக்கை எடுக்காவிட்டால் பின் ஏதாவது அசாம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் குமுறுகிறார்கள். 

உரிய நடவடிக்கை எடுக்குமா அரசு பொறுத்திருந்து பார்ப்போம். வருவாய் கோட்டாச்சியர் ஏற்கனவே விதிமுறை மீறுவோர், பொது மக்கள் கூடும்இடங்களில் வெடிக்கடை போடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மணிகண்டன்

சார்ந்த செய்திகள்