திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரிந்து காவல் ஆளினர்களின் குடும்பங்களுக்கு கல்வி உதவி, மகப்பேறு உள்ளிட்ட தொகை தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவி தொகை, மகப்பேறு மருத்துவ உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு தொகையை வழங்கி உரிய அறிவுரைகள் வழங்கினார்கள். அதன்படி திருச்சி மாநகரத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களின் 9 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக 1,40,000 ரூபாயும், காவலர்களுக்கான மகப்பேறு மருத்துவ உதவி செலவிற்காக 21 காவல் ஆளிநர்களுக்கு தலா 25,000 ரூபாயும், 5,25,000 ரூபாயும் மற்றும் காவல் குடும்ப உறுப்பினர்களின் இறப்பிற்கு ஈமச்சடங்கு ஆளிநர்களின் செலவுவிற்காக 12 காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகையாக ரூபாய் 10,000 வீதம், 1,20,000 ரூபாயும் ஆக மொத்தம் 7,85,000 ரூபாயும் நிதியை தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து பெற்று, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், வழங்கினார். மேலும் கல்வி உதவி தொகை பெறுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.