Skip to main content

சொந்த ஊரில் சூழழியல் போராளி முகிலன்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
ம்

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன்.  

கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் புரட்சிகர இயக்கங்களில் பணியாற்றியவர். பிறகு கூடம்குளம் சென்று அனு உலைக்கு எதிராக மக்களை திரட்டி பெரும் போராட்டங்களுக்கு துணை நின்றதால் போராட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார்.  இதனால் முகிலன் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை அரசு ஏவியது. ஜல்லிகட்டு போராட்டம், கரூர் காவிரி ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்களை திரட்டி பல போராட்டங்கள் நடத்தினார். 
பல வழக்குகளின் பேரில் முகிலனை கைது செய்த போலீஸ் பாளையங்கோட்டை மற்றும் மதுரை சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்தது.  ஒரு வருடம் 9 நாட்கள் என 374 நாட்கள் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி தொடர்ந்து 55 நாட்கள் கரூரில் நீதிமன்ற பிணையில் இருந்தார். தற்போது பிணை விடுவிக்கப் பட்டது.  இப்படி 430 நாட்களுக்குப் பிறகு தனது குடும்பத்தை காண சொந்த ஊரான சென்னிமலைக்கு நேற்று 19 ந் தேதி இரவு வந்தார் முகிலன். 

 

சென்னிமலை பேருந்து நிலையம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த முகிலன்,  எந்த அரசாலும் எந்த விதமான அடக்கு முறை சக்திகளாலும் என் போராட்ட உணர்வை முடக்க முடியாது.  தமிழகத்தை காப்பதில் என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார். கம்யூனிஸ்ட் தோழர்கள் முகிலனை வரவேற்று வாழ்த்தினார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இரவோடு இரவாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட முகிலன் ! 

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். இந்நிலையில் 6-ம் தேதி திருப்பதியில் அவரை ஆந்திர போலீசார் மீட்டனர். இதனிடையே இசை என்கிற ராஜேஸ்வரி என்கிற பெண் அளித்த பாலியல் புகாரில் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தினர். 

 

m

இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்ட அவர், மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். 

 

இதற்கிடையில் முகிலன் போலிசாரிடம் என்னை இரவில் தங்க வைத்து விட்டு பகலில் ஆஜர் படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் போலிசாரோ இரவோடு இரவாக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட முகிலன், நள்ளிரவில் கரூர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்ற எண் 2ன் நீதிபதி விஜய கார்த்திக் முன்னிலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் முகிலன் அடைக்கப்பட்டார்.

 

 இதனிடையே சென்னை நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக நள்ளிரவில் தன்னை கரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியுள்ளதாக முகிலன் முழக்கமிட்டார். எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என காவல்துறை நினைக்கிறார்கள் என்று கதறினார். 

 

அதே நேரத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி, இருட்டு அறையில் அடைத்து முகிலனை சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.