




Published on 12/05/2021 | Edited on 12/05/2021
சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள மஸ்ஜித் ஜாவித் மசூதி சார்பில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜனுடன் கூடிய சுமார் 10 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மசூதியின் செயலாளர் முகமது யூசுப்பிடம் இதுகுறித்து கேட்டபோது “இங்கு மசூதிக்கு வருபவர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் சேர்த்துதான் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் தற்போது பத்து படுக்கைகளுடன் துவக்கக்கப்பட்டுள்ளது. விரைவில் இது விரிவுபடுத்தப்பட்டு மசூதியில் உள்ள இடத்துக்கு ஏற்றவாறு படுக்கைகள் தயார் செய்யப்படும்” என்று கூறினார்.