கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி என்ற கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு குரங்கு கூட்டங்களில் இருந்து தப்பி வந்த ஒரு குரங்கு கிராமத்தில் தங்கியிருந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட வர்களை கடித்துள்ள குரங்கு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அதே கிராமத்தில் வசிக்கும் கீதா என்பவரின் 3 வயது பெண் குழந்தையை தலை மற்றும் கைகளில் கடித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வெறிபிடித்த குரங்கை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதின்பேரில் அவர்களும் சனிக்கிழமையன்று குரங்குக்கு கூண்டு வைத்து காத்திருந்தனர். கூண்டில் சிக்காமல் குரங்கு தப்பித்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெறி பிடித்த குரங்கு எப்போது கடிக்குமோ என்ற பயத்தில் உள்ளனர். விரைவில் வனத்துறையினர் குரங்கை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.